சென்னை:கட்டட விதிமீறல் புகார் அடிப்படையில், சென்னை வடபழநி தனியார் கல்வி குழுமத்திற்கு சொ
ந்தமான, சிம்ஸ் மருத்துவமனைக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.சென்னை வடபழநி, 100 அடி சாலையில், தனியார் கல்வி குழுமம் சார்பில், 'சிம்ஸ்' மருத்துவமனை, 2015 முதல் செயல்பட்டு வருகிறது.முந்தைய நில உரிமையாளர் குடியிருப்பு கட்ட பெற்ற அனுமதியை பயன்படுத்தி, புதிய கட்டடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த கட்டடத்தில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் முறையாக அமைக்கப்படாததால், கடந்த ஆட்சிக் காலத்தில் இக்கட்டடத்துக்கு பணி நிறைவு சான்று வழங்க சி.எம்.டி.ஏ., மறுத்தது. ஆனால், சில மாதங்கள் முன் இக்கட்டடத்துக்கு பணி நிறைவு சான்று வழங்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.இந்த பின்னணியில், இந்த கட்டடத்துக்கு நகரமைப்பு சட்டப்படி, நோட்டீஸ் அளித்துள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE