இருளும், இருள் சூழ்ந்த இடமாக ஊத்துக்குளி ரோடு!

Added : மே 14, 2022
Advertisement
மின் கம்பம் வேண்டும்திருப்பூர், 17வது வார்டு, ஜெ.பி., நகர் முதல் கஞ்சம்பாளையம் வரை தெருவிளக்கு அமைக்கவில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது. புதிய தெருவிளக்கு அமைக்க வேண்டும்.- பிரகாஷ், ஜெ.பி., நகர்.நிழற்குடை அமைக்கலாமே!திருப்பூர் - பல்லடம் மெயின் ரோடு, அருள்புரத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். வெயில், மழை காலங்களில் நிற்க இடமின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர்.-பிரபு,
 இருளும், இருள் சூழ்ந்த இடமாக ஊத்துக்குளி ரோடு!

மின் கம்பம் வேண்டும்
திருப்பூர், 17வது வார்டு, ஜெ.பி., நகர் முதல் கஞ்சம்பாளையம் வரை தெருவிளக்கு அமைக்கவில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது. புதிய தெருவிளக்கு அமைக்க வேண்டும்.- பிரகாஷ், ஜெ.பி., நகர்.
நிழற்குடை அமைக்கலாமே!
திருப்பூர் - பல்லடம் மெயின் ரோடு, அருள்புரத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். வெயில், மழை காலங்களில் நிற்க இடமின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர்.-பிரபு, அருள்புரம்.'பேட்ஜ் ஒர்க்' அவசியம்திருப்பூர் - கூலிபாளையம் நால்ரோட்டில் இருந்து தாமரைக்கோவில் ஸ்டாப் வரை, குடிநீர் குழாய் பதிப்புக்கு நடுரோட்டில் குழி தோண்டப்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் தடுமாறுகின்றனர்.-ரோஹித், கூலிபாளையம்.

)வீணாகும் தண்ணீர்
திருப்பூர், அரண்மனைப்புதுார், மாகாளியம்மன் கோவில் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.-கார்த்திகேயன், அரண்மனைப்புதுார். (படம் உண்டு)தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், ஊத்துக்குளி மெயின்ரோடு, மண்ணரை பஸ் ஸ்டாப்பில், கே.வி.பி., வங்கி எதிரில், ஒரு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை.-குட்டி, மண்ணரை.
கட்டுமான பொருள் இடையூறு
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரத்தில் கட்டுமான பொருட்கள் ரோட்டில் இடையூறாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகேசன், திருநீலகண்டபுரம்.

கழிவுகள் அகற்றப்படுமா?
திருப்பூர், 25வது வார்டு, அம்மன்நகர், மூகாம்பிகை காலனியில் ரோட்டோரத்தில் கழிவுகள் கொட்டப்படுகிறது. கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீதியில் ஓடுகிறது.-வேலுகோபி, அம்மன் நகர்.

ரியாக் ஷன் மின்கம்பம் மாற்றம்
திருப்பூர், 33 வது வார்டு, மண்ணரை, சத்யாகாலனி, ஏழாவது வீதி விரிவில், விழும் நிலையில் இருந்த மின்கம்பம் மின்வாரியத்தினரால் மாற்றப்பட்டு விட்டது.-குமார், சத்யாகாலனி.

சிக்னல்' கிடைச்சாச்சு!
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில் பழுதாகிய சிக்னல் போக்குவரத்து போலீசாரல் நேற்று சரி செய்யப்பட்டு விட்டது.-குழந்தைவேல், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X