சாலை விரிவாக்கத்துக்குவாகனம் கணக்கெடுப்பு

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக, கடந்து செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் அமைந்துள்ளது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு - மதுரை நெடுஞ்சாலை ஆகிய முக்கிய ரோடுகள் காங்கயத்தை கடந்து செல்கின்றன.நெடுஞ்சாலைத்துறை சார்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில், வாகனங்கள் கணக்கெடுப்பு

திருப்பூர்:நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக, கடந்து செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் அமைந்துள்ளது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு - மதுரை நெடுஞ்சாலை ஆகிய முக்கிய ரோடுகள் காங்கயத்தை கடந்து செல்கின்றன.நெடுஞ்சாலைத்துறை சார்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில், வாகனங்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். பிரதான ரோடுகள் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அதனடிப்படையில் திட்டம் மேற்கொள்ளப்படும்.அவ்வகையில், 2017ல் கணக்கெடுப்பு நடைபெற்றது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் தொடர் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இப்பணி மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மீண்டும்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கயம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X