திருப்பூர்:''மின்பணியாளர், விழிப்பாகவும், நிதானமாகவும் இருந்தால், உயிரிழப்புகளை தவிர்க்கலாம்,'' என, செயற்பொறியாளர் விஜயேஸ்வரன் பேசினார்.திருப்பூர் கோட்ட அளவிலான, மின்பணியாளருக்கான, பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, கோட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, அவிநாசி உட்கோட்ட செயற்பொறியாளர் விஜயேஸ்வரன், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசியதாவது:மின் பணியாளர்கள், கம்பத்தில் ஏறும் போது, ஆரோக்யமான, உற்சாகமான மனநிலையுடன் இருக்க வேண்டும். மின் விபத்துகள், மின்வாரிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலும், கட்டடங்களுக்கு உள்ளேயும் நடக்கிறது.இருவகையாக நடக்கும் விபத்துகளை தவிர்க்க, மின்நுகர்வோர்களும் விழிப்பாக இருக்க வேண்டும். வீடு, அலுவலகம், கடைகளில், மின் பாதுகாப்பு அளிக்கும், இ.எல்.சி.பி., கட்டாயம் பொருத்த வேண்டும். இதன்மூலமாக, வீட்டின் உள்ளே மின்குறைபாடு ஏற்பட்டால், உடனே மின்தடை ஏற்பட்டு விபத்து தடுக்கப்படும்.மின் மீட்டருக்கு வெளியே நடக்கும் விபத்துகளை தடுக்க, பணியாளர் கவனமாக இருக்க வேண்டும். 'இடுப்பு கயிறு எமனையும் வெல்லும்', 'எர்த்ராடு இணையற்ற நண்பன்', 'கையுறை இருந்தால் கைவிடாது' என்ற பழமொழிகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.மின் பணியாளர், விழிப்பாகவும், நிதானமாகவும் இருந்தால், உயிரிழப்புகளை தவிர்க்கலாம். மின்வாரியம் நடத்திய ஆய்வுகளில்,'டிரான்ஸ்பார்மர்' சரியாக 'ஆப்' செய்யாமல் இருந்ததால், அனுபவம் வாய்ந்த பணியாளர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.மின் கம்பத்தில் ஏறும் முன்பாக, 'டிரான்ஸ்பர்மரில்' அனைத்து இணைப்புகளையும் துண்டித்துள்ளோமோ என மீண்டும் உறுதி செய்ய வேண்டும். துாக்கமின்மை, வீட்டு பிரச்னை, குடிபோதை போன்ற பாதிப்புகள் இருந்தால், மின்கம்பத்தில் ஏறுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.'இடுப்பு கயிறு எமனையும் வெல்லும்', 'எர்த்ராடு இணையற்ற நண்பன்', 'கையுறை இருந்தால் கைவிடாது' என்ற பழமொழிகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE