ஜவுளி தொழிலை பாதுகாக்க போராட்டம்: நிட்மா அழைப்பு| Dinamalar

ஜவுளி தொழிலை பாதுகாக்க போராட்டம்: 'நிட்மா' அழைப்பு

Added : மே 14, 2022 | |
திருப்பூர்;ஜவுளித்தொழிலை பாதுகாக்க கோரி, 16, 17ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென, 'நிட்மா' சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) தலைவர் ரத்தினசாமி அறிக்கை:ஜவுளித்தொழிலை பாதுகாக்க கோரி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 16, 17ம் தேதிகளில், வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு

திருப்பூர்;ஜவுளித்தொழிலை பாதுகாக்க கோரி, 16, 17ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென, 'நிட்மா' சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) தலைவர் ரத்தினசாமி அறிக்கை:ஜவுளித்தொழிலை பாதுகாக்க கோரி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 16, 17ம் தேதிகளில், வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும், பஞ்சை 'யூகபேர' பட்டியலில் இருந்து நீக்கி, அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.தொழில்துறையினர், 'நிட்மா' உறுப்பினர்கள், தங்கள் நிறுவனங்களை அடைத்து, உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். வரும் 17ம் தேதி, மா.கம்யூ.,யின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X