புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் பிறந்த நாளில் பள்ளியை சீரமைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணி புரிபவர் சதீஷ்குமார், 40.நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு, புதிதாக வண்ணம் தீட்டி, இருக்கை வசதி, ஸ்மார்ட் 'டிவி' போன்றவற்றை, 1 லட்சம் ரூபாய் செலவில் செய்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த பள்ளிக்கு பணி மாறுதலில் வந்த அவர், ஏற்கனவே 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சுற்றுச்சுவரை சீரமைத்தார்.நண்பர்கள் உதவியுடன், 75 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளி கழிப்பறையையும் புனரமைத்துள்ளார். திருச்சி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறு அரசு பள்ளிகளுக்கு, 6 லட்சம் ரூபாயை, வெளிநாடு வாழ் நண்பர்களிடம் நன்கொடையாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE