வாலிபர் மீது குண்டாஸ்

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த ஆசாமியை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில், கடந்த பிப்., 15ம் தேதி, ஆறு பேர் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி, 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, துணிகளை எடுத்துக்கொண்டு தப்பினர்.இதில் தொடர்புடைய சஞ்சய்குமார், ராம்பிரபு, சூர்யா, சரவணன், பிரவீன்

திருப்பூர்:தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த ஆசாமியை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில், கடந்த பிப்., 15ம் தேதி, ஆறு பேர் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி, 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, துணிகளை எடுத்துக்கொண்டு தப்பினர்.இதில் தொடர்புடைய சஞ்சய்குமார், ராம்பிரபு, சூர்யா, சரவணன், பிரவீன் ஆகியோரை, 15 வேலம்பாளையம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.சஞ்சய்குமார் மீது, ஏற்கனவே கொலைமுயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சஞ்சய்குமாரை, குண்டர் சட்டத்தில் அடைக்க, போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவிட்டார்.அதன்படி, கோவை மத்திய சிறையில் உள்ள சஞ்சய்குமாரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க, உத்தரவு வழங்கப்பட்டது.நடப்பு ஆண்டில் இதுவரை, திருப்பூர் மாநகர போலீசில், 37 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X