திருப்பூர்:நுால் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஜவுளித்துறையினர் கோரிக்கை குறித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுமென, ஜவுளித்துறை செயலர் உறுதி அளித்துள்ளார்.திருப்பூருக்கு நேற்று வந்திருந்த, தமிழக ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். நிறைவாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில், ஏற்றுமதியாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.நுால் விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் விளக்கினர்.கோரிக்கைகளை கேட்டறிந்த, ஜவுளித்துறை செயலர், ஜவுளித்தொழில் சந்தித்துள்ள பிரச்னைகள் குறித்தும், சரியான தீர்வு வழங்க கோரியும், மத்திய அரசுக்கு ஜவுளித்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:பருத்தி ஏற்றுமதிக்கும், நுால் ஏற்றுமதிக்கும் தற்காலிக தடை, நுால் இறக்குமதி சலுகை; பருத்தியை அத்யாவசிய பட்டியலில் சேர்ப்பது போன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.அத்துடன், கொரோனா ஊரடங்கு காலத்தில், கடன் நிலுவையில், 30 சதவீதம் மறு கடனாக வழங்கப்பட்டது. மருத்துவமனை, ஓட்டல்களுக்கு, 50 சதவீதம் வழங்கப்பட்டது.அதன்படி, பனியன் தொழிலுக்கு, மேலும், 20 சதவீதம் கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசுக்கு இதுகுறித்து பரிந்துரைக்கப்படுமென உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE