சொத்து வரி உயர்வு பிரச்னை: ஆட்சேபனை சொல்ல ஆளில்லை!

Added : மே 14, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் நகராட்சியில், சொத்து வரி உயர்வு குறித்து ஆட்சேபம் தெரிவிக்க ஒருவரும் மனு அளிக்கவில்லை.கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.எனவே, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், அல்லது வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.சொத்து

பல்லடம்:பல்லடம் நகராட்சியில், சொத்து வரி உயர்வு குறித்து ஆட்சேபம் தெரிவிக்க ஒருவரும் மனு அளிக்கவில்லை.கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.எனவே, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், அல்லது வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.சொத்து வரி உயர்வு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவும், ஆட்சேபனைகள் கடிதமாக பெறப்பட்டு அரசுக்கு வழங்கப்படும் என்றும், நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆட்சேபனை கடிதங்களை, மே 12ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.சொத்து வரி உயர்வால் தனியாக பாதிக்கப்படுவதாக வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். ஆனால், கடைசி நாளான நேற்று வரை யாருமே இது தொடர்பாக மனு கொடுக்கவில்லை.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சொத்துவரி உயர்வு குறித்த ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு ஒரு மாதத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.கடைசி நாளாக நேற்று மா.கம்யூ., கட்சியினர் மட்டும் மனு அளித்தனர். மற்றபடி, ஒருவரும் அளிக்கவில்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X