கதிரவன் மெட்ரிக் பள்ளி முப்பெரும் விழா| Dinamalar

கதிரவன் மெட்ரிக் பள்ளி முப்பெரும் விழா

Added : மே 14, 2022 | |
திருப்பூர்:திருப்பூர், கே.வி.ஆர்., நகரிலுள்ள கதிரவன் மெட்ரிக் பள்ளியில், அன்னையர் தினம், பள்ளி விளையாட்டு விழா மற்றும் மழலையர்கள் பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவுக்கு பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் புஷ்பம், நிவேதா பங்கேற்றனர். அன்னையர் தினம் குறித்து, பள்ளி செயலாளர் இந்திராணி பேசினார். பெற்றோருக்கு குழு விளையாட்டு போட்டி,
 கதிரவன் மெட்ரிக் பள்ளி முப்பெரும் விழா

திருப்பூர்:திருப்பூர், கே.வி.ஆர்., நகரிலுள்ள கதிரவன் மெட்ரிக் பள்ளியில், அன்னையர் தினம், பள்ளி விளையாட்டு விழா மற்றும் மழலையர்கள் பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவுக்கு பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் புஷ்பம், நிவேதா பங்கேற்றனர். அன்னையர் தினம் குறித்து, பள்ளி செயலாளர் இந்திராணி பேசினார். பெற்றோருக்கு குழு விளையாட்டு போட்டி, தனித்திறமைக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், பள்ளி விளையாட்டு போட்டியில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.மழலையர் பிரிவின் பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களையும் பள்ளி செயலாளர் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X