மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்: தனியார் நிறுவனம் தாராளம்

Added : மே 14, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம் 13வது வார்டில், பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதி இல்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத் தரப்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனடிப்படையில் திருப்பூர் பிரைம் டெக்ஸ் நிறுவனம் இங்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர முன் வந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம் 13வது வார்டில், பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதி இல்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத் தரப்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனடிப்படையில் திருப்பூர் பிரைம் டெக்ஸ் நிறுவனம் இங்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர முன் வந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள கட்டட முதல் தளத்தில், 33.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்டும் பணி நேற்று துவங்கியது.இதற்கான பூமி பூஜை நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.பிரைம் டெக்ஸ் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ், ரேவதி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X