திருப்பூர்:பிளஸ் 2 மாணவர்களுக்கான வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வு 5 மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தது. திருப்பூரில் மாவட்டத்தில் வேதியியல் தேர்வினை, 11 ஆயிரத்து, 455 பேரும், கணக்குப்பதிவியல் தேர்வினை, 12 ஆயிரத்து 513 பேரும், புவியியல் தேர்வினை, 304 பேரும் எழுதினர். வேதியியல் - 317, கணக்குப்பதிவியல் - 807, புவியியல் தேர்வினை - 37 பேர் என 'ஆப்சென்ட்' ஆகினர்.வினாத்தாள் குறித்து மாணவர்கள் கூறியதாவது:பி.திவாகர்: வேதியியல் பாடத்தில் நிறைய கேள்விகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஐந்து மதிப்பெண் கேள்விகள் புரிந்து கொண்டு பதிலளிக்க சிரமமாக இருந்தது. இருந்தாலும், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன்.எம்.வாஞ்சிநாதன்: வேதியியல் தேர்வு வினாத்தாள் சி.பி.எஸ்.இ., பாணியில் இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள், ஐந்து மதிப்பெண் கேள்விகள் சற்று கஷ்டமாக இருந்தது. மற்றபடி நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஓரளவு ஈஸிதான்.கே.விக்னேஷ்வரன்: கணக்கு பதிவியல் துறையை பொருத்தவரை, நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, ஒரு மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் கேள்விகள் சற்று 'டிவிஸ்ட்' செய்து கேட்கப்பட்டிருந்தன.பி.சந்தோஷ்குமார்: கணக்குப்பதிவியல் ஓரளவுக்கு கேள்வித்தாள் ஈஸியாக இருக்கும் என எதிர்பார்த்து சென்றேன். கணக்கீடு அடிப்படையில் தீர்வு காணும் கேள்விகள் அதிகம் வந்திருந்தன. 5 மதிப்பெண் கேள்விகளை உள்வாங்கி எழுதியவர்கள் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும்.ராஜ்குமார், ஆசிரியர்: குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் இடம்பெற்றிருந்தன. 'புக் பேக்' கேள்விகளே பெரும்பாலும் இடம்பெற்றிருந்தன. சராசரி மாணவர்களும் நல்ல மதிப்பெண் எளிதாக பெற முடியும். அந்தளவுக்கு எளிதாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE