விளை நிலத்தில் ரசாயன கேன் வீச்சு! பல்லடம் அருகே விவசாயிகள் அதிர்ச்சி

Added : மே 14, 2022
Advertisement
பல்லடம்:பல்லடம் அடுத்த சித்தம்பலம் புதுார் கிராமத்தில், விவசாய நிலங்களை ஒட்டி, ரசாயனம் நிரப்பப்பட்ட ஏராளமான கேன்கள் வீசப்பட்டுள்ளன.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:சித்தம்பலம் பகுதியில் விளை நிலங்களை ஒட்டியும், முட்புதர்களுக்கு உள்ளேயும் ரசாயனம் நிரப்பப்பட்ட கேன்கள் வீசப்பட்டுள்ளன. கேன்கள் அனைத்திலும், இளஞ்சிவப்பு நிறத்தில் ஏதோ ஒரு ரசாயனம்
 விளை நிலத்தில் ரசாயன கேன் வீச்சு! பல்லடம் அருகே விவசாயிகள் அதிர்ச்சி

பல்லடம்:பல்லடம் அடுத்த சித்தம்பலம் புதுார் கிராமத்தில், விவசாய நிலங்களை ஒட்டி, ரசாயனம் நிரப்பப்பட்ட ஏராளமான கேன்கள் வீசப்பட்டுள்ளன.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:சித்தம்பலம் பகுதியில் விளை நிலங்களை ஒட்டியும், முட்புதர்களுக்கு உள்ளேயும் ரசாயனம் நிரப்பப்பட்ட கேன்கள் வீசப்பட்டுள்ளன. கேன்கள் அனைத்திலும், இளஞ்சிவப்பு நிறத்தில் ஏதோ ஒரு ரசாயனம் நிரப்பப்பட்டுள்ளது. கேன்களில் இருப்பது என்ன ரசாயனம், எதற்கு பயன்படுத்துவது, பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை.துர்நாற்றத்துடன் கூடிய இந்த ரசாயனங்கள் எதற்காக விளை நிலங்களை ஒட்டி வீசப்பட்டன என்பது தெரியவில்லை. உடுமலை ரோடு கேரளாவை இணைப்பதால், கேரள மாநில வாகனங்களும் அதிகளவில் இவ்வழியாக வந்து செல்கின்றனர்.எனவே, கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகளா என்ற சந்தேகமும் உள்ளது. விவசாயம், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளதால், விளை நிலம் அருகே வீசப்பட்டு உள்ள ரசாயனங்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இது குறித்து ஆய்வு செய்து, வீசியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X