அவிநாசி,:அவிநாசி அரசு மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்தி பல்வேறு சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என பேரூராட்சி தலைவர், சுகாதாரத்துறை செயலாளரிடம் மனு வழங்கினார்.அவிநாசி அரசு மருத்துவமனையை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நேற்று பார்வையிட்டார். அவரிடம் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி வழங்கிய மனு:அரசு மருத்துவமனையில், 42 படுக்கை மட்டுமே இருப்பதால், தினமும், 30- - 35 பேர், உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த இம்மருத்துவமனை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது இருப்பினும் அதற்கேற்ப கட்டடங்கள் கட்டப்படவில்லை; மருத்துவ சேவை விரிவுபடுத்தப்படவில்லை.இந்த மருத்துவமனை, கோவை -- திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையை யொட்டி இருப்பதால், அடிக்கடி ஏற்படும் வாகன விபத்தில் சிக்கியவர்களுக்கு, விரைவான, உயிர்காக்கும் மருத்துவ சேவை வழங்க முடியாத நிலை இங்குள்ளது.இதனை மேம்படுத்தி அவசர கால வார்டு, ஐ.சி.யு, நவீன ஆய்வுக்கூடம், ரத்த சேமிப்பு அறை, 30 படுக்கை கொண்ட குழந்தைகள் வார்டு, வெளி நோயாளிகளுக்கான சிறப்பு அறை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த 24 மணி நேர சேவை மையம் என, விரிவாக்கம் செய்ய தக்க ஆணையை அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE