திருப்பூர்:தனியார் பள்ளி தேர்வு மையத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மட்டுமே கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியுள்ளது. அறை கண்காணிப்பாளர்களாக முதுகலை ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அறை கண்காணிப்பாளர் எண்ணிக்கையில், 60 முதல், -70 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களை சுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.இருப்பினும் மேல்நிலை தேர்வுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பதாகவும் ஆசிரியர் தரப்பில் புகார் எழுந்தது.இதனால், நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 'தேர்வு பணி இல்லை' என்பதை உடனடியாக தகவல் தெரிவிக்க, அனைத்து முதன்மை கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.அவர் கூறுகையில், 'பட்டதாரி ஆசிரியர்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தவோ, தேவை இல்லாமல் தேர்வு மையத்திற்கு அழைத்து திரும்பி செல்ல செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். இந்த நடைமுறை அரசு பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட்டால் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.தனியார் பள்ளிகள் தேர்வு மையமாக இருப்பின் அனைத்து அறை கண்காணிப்பாளர்களையும் அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE