திருமணத்தை எதிர்நோக்கியுள்ள பெண்கள், தங்கள் வீட்டு அடுப்பங்கரையில் உள்ள பொருட்களை கொண்டே ஜொலிக்கலாம்என்கிறார், அழகு கலை ஆன்லைன் பயிற்சியாளர் நிர்மலா ராஜேஷ்.அவர் அளிக்கும் 'டிப்ஸ்'அழகு என்பது வெளிப்பூச்சு மட்டுமல்லாமல், உண்ணும் உணவிலும் அதிக பங்கு உள்ளது. திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்பு முதல், சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.n கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் கடித்து விழுங்க வேண்டும்.
அத்துடன் முடிந்தால் நெல்லிக்காய் ஒன்று அல்லது ஒரு தக்காளி சாப்பிடலாம்.அதன் பிறகு, சுடான தண்ணீரில் மஞ்சள் ஒரு சிட்டிகை, பட்டை பொடி, தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். அல்லது, சுடுநீரில் சோம்பு போட்டு கொதிக்கவிட்டு, அதில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். n கற்றாழை ஜூஸ் எடுத்து எலுமிச்சை, தேன் கலந்து பருகலாம். இதில் எது எளிதோ அதனை பருகலாம்.
இதை குடித்து ஒரு மணி நேரம் டீ, காபி பருக கூடாது. இதை தொடர்ந்து வந்தால் உடலின் கழிவுகள் அனைத்தும் வெளியேறி, முகப்பொலிவு தாமாக ஏற்படுவதை காண முடியும்.n கடலை மாவு ஒரு பங்கு, பச்சைபயறு மாவு ஒரு பங்கு, அதிமதுரம் பவுடர் ஒரு பங்கு, வேப்ப இலை பவுடர் ஒரு பங்கு, ரோஜா இலை, வசம்பு கால் பங்கு, நல்ல சந்தன பவுடர் சிறிது எடுத்துக்கொண்டு.
இவை அனைத்தையும் பன்னீர் அல்லது தயிருடன் சேர்த்து, உடலில் தேய்த்து குளித்தால் சருமம் மிருதுவாக மாறும். எண்ணெய் மசாஜ் செய்த பின் குளிக்கும் போது, இம்முறையை பயன்படுத்தலாம்.n கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,கொஞ்சம் இஞ்சி, ஒரு நெல்லிக்காய், அனைத்தும் அரைத்து வடிகட்டி, ஒரு எலுமிச்சை சேர்த்து வாரம் ஒரு முறை ஜூஸ் ஆக குடித்தால் சருமம் சும்மா ஜொலிக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE