உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே மாணவியர் 'ஹிஜாப்' அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்த தேர்வு பொறுப்பாளர் விடுவிக்கப்பட்டு, மாற்று பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் பிளஸ் 1 தேர்வுக்கு வந்த ஆறு முஸ்லிம் மாணவியர், 'ஹிஜாப்' எனப்படும் முழு உடலையும் மறைக்கும் ஆடை அணிந்திருந்தனர்.அவர்களிடம், 'இனி ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வரக்கூடாது' என, தேர்வு பொறுப்பாளர் சரஸ்வதி கூறினார்.
இதற்கு மாணவியின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, சி.இ.ஓ., விஜயலட்சுமி உத்தரவின் படி, தேர்வு பொறுப்பாளரான சரஸ்வதி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அவருக்கு பதிலாக, உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் கலைச்செல்வன் நியமிக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE