குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சு...

Added : மே 14, 2022 | |
Advertisement
கோடை விடுமுறை துவங்கியாச்சு... குழந்தைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம் தான். அமைதியா கொஞ்சம் நேரம் இருந்தா போதும் என்று, மொபைல் போனை கைகளில் கொடுத்தும், அதிக நேரம் கார்ட்டூன் பார்க்க அனுமதித்து, மீண்டும் அவர்களின் மனநிலையில் ஓர் இறுக்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.வேறு என்னதான் செய்யலாம் என குழம்பியுள்ள பெற்றோரே... மேலே
 குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சு...

கோடை விடுமுறை துவங்கியாச்சு... குழந்தைகளுக்கு கொண்டாட்டம், பெற்றோருக்கு திண்டாட்டம் தான். அமைதியா கொஞ்சம் நேரம் இருந்தா போதும் என்று, மொபைல் போனை கைகளில் கொடுத்தும், அதிக நேரம் கார்ட்டூன் பார்க்க அனுமதித்து, மீண்டும் அவர்களின் மனநிலையில் ஓர் இறுக்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.வேறு என்னதான் செய்யலாம் என குழம்பியுள்ள பெற்றோரே... மேலே படிங்க!கற்களில் ஓவியம் குழந்தைகளின் கற்பனை வளத்தை மேம்படுத்தும், பொழுதுபோக்கு பழக்கங்களை பயிற்றுவிக்க இந்த ஒரு மாத காலத்தை, பெற்றோர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். ஓவியம் வரைதல் மூலம் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். சாதாரணமாக தாள்களை கொடுக்காமல், உருண்டை, தப்பட்டையான கற்கள், முட்டை ஓடுகள், சிறு சிறு மண் பானைகள் போன்றவற்றுடன் உரிய கலர்கள், பிரஷ் கொடுத்தால் ஆர்வத்துடன் ஓவியம் வரைந்து பழக முன்வருவார்கள். முதலில் கிறுக்கலாகதான் துவங்கும். போக, போக பாருங்கள்!நுாலகங்களுக்கு 'விசிட்' உங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள நுாலகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிறு கதை புத்தகங்களை எடுத்து படிக்க பழக்கப்படுத்துங்கள். வயதுக்கு ஏற்ப எளிமையான வண்ணங்கள் நிறைந்த புத்தங்களை, முதலில் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். தன் குழந்தை மட்டுமின்றி அருகில் இரண்டு, மூன்று குழந்தைகளை சேர்த்து அழைத்துச்சென்று நுாலகத்தில் அமரவையுங்கள். காலையில் படித்த கதையை மாலையில் அனைவரையும் அமர வைத்து கூறச்சொல்லுங்கள். சிறப்பாக கூறுபவர்களுக்கு சிறு பரிசை கொடுத்து, ஒரு ஆரோக்கிய போட்டி ஏற்படுத்துவது, புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும்.வளர்ப்பு பிராணிகள்வீட்டில் சூழலுக்கு ஏற்ப, வளர்ப்பு பிராணிகள் வாங்கிக்கொடுக்கலாம். பிராணிகளை பராமரிக்கும் பொறுப்பை, பெற்றோர் மேற்பார்வையில் அவர்களிடமே விட்டு விடலாம். இது ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும், பொறுப்புகளை வழங்குவதாகவும் இருக்கும். வளர்ப்பு பிராணிகளை வளர்க்க முடியாதவர்கள் தெருவில் உள்ள பிராணிகளுக்கு உணவளிக்கவும், தண்ணீர் வைக்கவும் ஊக்குவிக்கலாம். அவர்களின் இறுக்கமான மனநிலையை தளர்த்த, பிராணிகள் வளர்ப்பு உதவும்.தோட்டம் அமைக்கலாம்வீட்டில் இடம் உள்ளவர்கள், மாடி உள்ளவர்கள் சிறிய பூ, காய்கறி தோட்டத்தை ஏற்படுத்திக்கொடுக்கலாம். செடிகள் வாங்கவும், நடவும் அவர்களை முழுவதும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதை பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் தர வேண்டும்.அவுட்டோர் பயிற்சி கோடை பயிற்சிகள் பல உள்ளன. அதில் படிப்பு மட்டும் சாராமல் விளையாட்டு, நீச்சல் போன்ற உடல் இயக்க பயிற்சிக்கு தினம் ஒன்று, இரண்டு மணி நேரம் அனுப்பலாம். கற்பனை வளத்தையும், மூளையின் செயல்பாடுகளையும் துல்லியமாகமேம்படுத்துவதில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்ற குழு விளையாட்டுக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பள்ளிகள் முதலே விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர்கள் சிக்கலான சூழல்களை எளிதாக சமாளிப்பதுடன், முடிவுகளை திறன்பட எடுக்கும் வல்லவர்களாக இருப்பார்கள்.காலை நடைபயிற்சி பள்ளி முடிந்துவிட்டது என்ற பத்து மணி வரை உறங்க அனுமதிக்காமல், வழக்கம்போல் காலையில் எழுப்பி விடுவது அவசியம். காலையில் சிறிது நேரம் நடை பயிற்சி அல்லது சைக்கிளிங் செய்வது, மூளை செயல்பாடுகளை அதிகம் ஊக்குவித்து புத்துணர்வுடன் இருக்க உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X