''தாய்மொழியோடு சேர்த்து கூடுதலாக இரண்டு மொழிகள் கற்றுக்கொண்டால் போதும் உலகம் உங்கள் உள்ளங்கைக்குள் வந்துவிடும்,'' என்கிறார் பன்மொழி பயிற்சியாளர் கிருபாஷினி.கோவை சுங்கம் பகுதியில் வசித்து வருபவர் கிருபாஷினி. எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள. இவர், 13 மொழிகளை கற்று தேர்ந்துள்ளார். இவருக்கு தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளும், ஆங்கிலம், பிரென்ச், ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீஸ், ஜப்பானீஷ் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளும் அத்துப்படி.இவை அனைத்தையும் முறையாக பேசவும், எழுதவும் கற்று இருக்கிறார். 'மை இங்கிலீஷ் கிராமர்' என்ற ஒரு நுாலையும் எழுதி இருக்கிறார். இப்போது பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, எளிமையான முறையில், மொழிப்பயிற்சி அளித்து வருகிறார். ''பள்ளியில் படிக்கும் போதே எனக்கு, தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பிரென்ச் ஆகிய நான்கு மொழிகளும் தெரியும். எல்லோரும் என்னை ஆச்சரியமாக பார்ப்பார்கள். பாராட்டவும் செய்வார்கள். இந்த பாராட்டுகள்தான் என்னை, மேலும் பல மொழிகளை கற்கும் ஆர்வத்தை துாண்டியது,'' என்கிறார் கிருபாஷினி.''ஒரு மொழி கற்றுக்கொள்ள எவ்வளவு மாதங்கள் தேவை,'' என்ற கேள்விக்கு, ''கூச்சம், பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, மூன்று மாதங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் ஒரு மொழியை சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ளலாம்,'' என்று அடித்துப்பேசுகிறார் இவர். மேலும் அவர், ''இன்றைக்கு, தாய்மொழியோடு சேர்த்து பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது அவசியம். நான்கு துறைகளில் பட்டம் பெற்ற ஒருவரால், நான்கு நிமிடம் தடுமாற்றம் இல்லாமல் ஆங்கிலம் பேச முடியவில்லை. பட்டப்படிப்பில் நிறைய மதிப்பெண் பெற்றவர்கள், அதிக திறமை உள்ளவர்கள் ஆங்கில மொழி தெரியாமல் நேர்காணலில் வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.கல்வி அறிவோடு சேர்த்து, ஆங்கில மொழியறிவும் இருந்தால்தான் வேலை கிடைக்கும். தாய்மொழியோடு கூடுதலாக இரண்டு மொழிகளை கற்றுக்கொண்டால், உலகம் உங்கள் உள்ளங்கைக்குள் வந்து விடும்,'' என்கிறார். நான்கு துறைகளில் பட்டம் பெற்ற ஒருவரால், நான்கு நிமிடம் தடுமாற்றம் இல்லாமல் ஆங்கிலம் பேச முடியவில்லை. பட்டப்படிப்பில் நிறைய மதிப்பெண் பெற்றவர்கள், அதிக திறமை உள்ளவர்கள் ஆங்கில மொழி தெரியாமல், நேர்காணலில் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். கல்வி அறிவோடு சேர்த்து, ஆங்கில மொழியறிவும் இருந்தால்தான் வேலை கிடைக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE