'பஞ்சர்' ஆனது அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

Added : மே 14, 2022
Advertisement
கோவை:ரயில்வே ஸ்டேஷன் எதிரே அரசு பஸ் டயர் 'பஞ்சர்' ஆகி, நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.காந்திபுரத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக கோவைப்புதுாருக்கு, 'எஸ்17' வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. காலை, 11:15 மணியளவில் ரயில்வே ஸ்டேஷன் எதிரே பஸ்சின் முன் டயர் 'பஞ்சர்' ஆகி நடுரோட்டில் நின்றது. இதனால், பின்தொடர்ந்து
 'பஞ்சர்' ஆனது அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

கோவை:ரயில்வே ஸ்டேஷன் எதிரே அரசு பஸ் டயர் 'பஞ்சர்' ஆகி, நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.காந்திபுரத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக கோவைப்புதுாருக்கு, 'எஸ்17' வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. காலை, 11:15 மணியளவில் ரயில்வே ஸ்டேஷன் எதிரே பஸ்சின் முன் டயர் 'பஞ்சர்' ஆகி நடுரோட்டில் நின்றது. இதனால், பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் வரிசைகட்டி நிற்க, அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உக்கடம் நோக்கி செல்லும் வாகனங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, அவிநாசி ரோடு மேம்பாலம் வழியாக மாற்று வழியில் இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X