வேலை வாய்ப்பு கிடைக்க மாணவர்களுக்கு என்ன தேவை?

Added : மே 14, 2022 | |
Advertisement
செட்டிபாளையம்:மலுமிச்சம்பட்டியிலுள்ள நேரு மகா வித்யாலயா கல்லூரியின், 28வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில் நடந்தது. விழாவில் திருப்பதி, ஐ.ஐ.டி., இயக்குனர் சத்யநாராயணா பேசியதாவது:கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்து பெரும் விவாதமே நடக்கிறது. கல்வி என்பது இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை, வேலை மற்றும் நல்ல குடிமகனாக இருப்பதற்கானது. ஆசிரியர்கள், மாணவர்களை தொடர்ந்து
 வேலை வாய்ப்பு கிடைக்க மாணவர்களுக்கு என்ன தேவை?

செட்டிபாளையம்:மலுமிச்சம்பட்டியிலுள்ள நேரு மகா வித்யாலயா கல்லூரியின், 28வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில் நடந்தது. விழாவில் திருப்பதி, ஐ.ஐ.டி., இயக்குனர் சத்யநாராயணா பேசியதாவது:கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்து பெரும் விவாதமே நடக்கிறது. கல்வி என்பது இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை, வேலை மற்றும் நல்ல குடிமகனாக இருப்பதற்கானது. ஆசிரியர்கள், மாணவர்களை தொடர்ந்து கற்க தயார்படுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் மிக விரைவில் சமுதாயத்துடன் தொடர்பின்றி போய்விடுவர். சாப்ட்வேர் துறையில் பயின்ற, 80 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். பரந்த அறிவு, மொழியறிவு, குழுவாக பணியாற்றுதல் மற்றும் தலைமை பண்பு கொண்டவர்களையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த, 17 பேருக்கு பட்ட சான்றிதழுடன், வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. 658 பேருக்கு பட்ட சான்றிதழை இயக்குனர் சத்யநாராயணா வழங்கினார். கல்லூரி தலைவர் ரமேஷ், செயலாளர் சுனில்குமார் நஹாட்டா, இணை செயலாளர் நிஷாந்த் ஜெயின் மற்றும் அலுவலர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X