தகவல் வேணுமா... பணம் கட்டிட்டு வாங்க! மாநகராட்சி பதிலால் கேள்வி கேட்டவர் அதிர்ச்சி

Added : மே 14, 2022
Advertisement
கோவை;தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட ஆவண நகல்கள் பெற, ரூ.8,600 பணம் செலுத்தச் சொல்லி, கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியிருப்பதால், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.அரசு துறை செயல்பாடுகள் ஒளிவு மறைவின்றி இருக்க வேண்டும் என்பதற்காக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், கோப்புகள் மற்றும் ஆவணங்களை, பொதுமக்கள் விண்ணப்பித்து பெற்றுக்

கோவை;
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட ஆவண நகல்கள் பெற, ரூ.8,600 பணம் செலுத்தச் சொல்லி, கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியிருப்பதால், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.அரசு துறை செயல்பாடுகள் ஒளிவு மறைவின்றி இருக்க வேண்டும் என்பதற்காக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், கோப்புகள் மற்றும் ஆவணங்களை, பொதுமக்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்கிற நடைமுறை அமலில் இருக்கிறது.இதன்படி, 30 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரி தகவல் அளிக்க வேண்டும். இல்லையெனில், மேல்முறையீடு செய்து பெறலாம். 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்காத பட்சத்தில், கோரப்படும் தகவல்கள் எத்தனை பக்கமாக இருந்தாலும் விண்ணப்பதாரருக்கு இலவசமாகவே வழங்க வேண்டும். இதை தவிர்க்க வேண்டுமெனில், பக்கங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, ஒரு பக்கத்துக்கு, 2 ரூபாய் வீதம் நிர்ணயித்து, கருவூலகத்தில் பணம் செலுத்தச் சொல்வது வாடிக்கை.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில், 'பிளாக் மேப்' வரைபட நகல் கேட்டு ஒருவர் விண்ணப்பித்ததற்கு, ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.50 வீதம், 150 சர்வே எண்களுக்கு ரூ.8,600ஐ அலுவலகத்தில் செலுத்தி, மீண்டும் விண்ணப்பிக்க, உதவி கமிஷனர் மாரிச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். இதேபோல், 2015ல் நில அளவை பதிவேடு பக்கங்கள் மற்றும் நகர அளவை வரைபடங்கள் கேட்டு விண்ணப்பித்தபோது, ஒரு பக்கத்துக்கு ரூ.4, வரைபட நகலுக்கு ரூ.150 சேர்த்து மொத்தம், 758 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ள, அப்போதைய உதவி கமிஷனர் பிரபாகரன் தெரிவித்திருக்கிறார். அதன்படி, பணம் செலுத்தி, ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.விண்ணப்பித்து, 30 நாட்களை கடந்து விட்டால், இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. தற்போது, ரூ.8,600 செலுத்தச் சொல்லி, மாநகராட்சி அதிகாரி பதில் கடிதம் அனுப்பியிருப்பதால், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:கோவை மாநகராட்சியில், 2011 முதல், 2021 வரை, 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 'பே பில்' நகல் கேட்டபோது, 12 ஆயிரம் பக்கங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வாகன பராமரிப்பு செலவினங்கள் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு, 2,500 பில் ரசீதுகள் வழங்கப்பட்டன. 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் தொடர்பாக, 661 பக்கங்கள் கொடுக்கப்பட்டன.இப்போது, இலவசமாக கொடுக்க வேண்டிய ஆவண நகல்களுக்கு, ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தச் சொல்லி, மாநகராட்சி கடிதம் அனுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X