தி.மு.க., கவுன்சிலர் கோர்ட்டில் ஆஜர்

Added : மே 14, 2022
Advertisement
கோவை,:கோவையில் போராட்டம் நடத்திய வழக்கில், தி.மு.க., கவுன்சிலர் கோர்ட்டில் ஆஜரானார்.கோவை மாநகராட்சி, 46வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி சத்துணவு கூடத்தை திறக்க கோரி, முற்றுகை போராட்டம் நடத்திய தி.மு.க., கவுன்சிலர் மீனா லோகு உட்பட ஐந்து பேர் மீது, 2015ல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை ஜே.எம்:2 கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று

கோவை,:கோவையில் போராட்டம் நடத்திய வழக்கில், தி.மு.க., கவுன்சிலர் கோர்ட்டில் ஆஜரானார்.கோவை மாநகராட்சி, 46வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி சத்துணவு கூடத்தை திறக்க கோரி, முற்றுகை போராட்டம் நடத்திய தி.மு.க., கவுன்சிலர் மீனா லோகு உட்பட ஐந்து பேர் மீது, 2015ல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை ஜே.எம்:2 கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த போது, மீனா லோகு உட்பட ஐந்து பேர் ஆஜரானார்கள். அரசு தரப்பு சாட்சிகள், குற்றச்சாட்டு குறித்து அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.எதிர் தரப்பு சாட்சிகளை விசாரிக்க அனுமதிக்க கோரி, அவர்களது தரப்பு வக்கீல் விஜயசேகர் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, வரும் 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X