பேரூர்:பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவர் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர் என இருவரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.கோவையை சேர்ந்த, 14 வயது பள்ளி மாணவியை காணவில்லை என, பெற்றோர் பேரூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை செய்தனர். பள்ளி மாணவி மேட்டுப்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று மாணவியை பத்திரமாக அழைத்து வந்தனர். விசாரணையில், பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த, ஷாருக்கான் 19 என்பவன், பள்ளி மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி, பல இடங்களுக்கும் அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததும், இதற்கு ஷாருக்கானின் நண்பன் அருப்புக்கோட்டையை சேர்ந்த உசேன், 21 உதவியாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, ஷாருக்கான் மற்றும் உசேன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE