கோவை;மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து போட்டியில், கே.ஆர்.வி., கால்பந்து கிளப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.கோவை மாவட்ட கால்பந்து கழகம் (அடாக் கமிட்டி) சார்பில் சீனியர் ஆண்களுக்கான லீக் போட்டி, சுங்கம் கார்மல் கார்டன் பள்ளியில் நடந்தது.இதில் 12 அணிகள் பங்கேற்று, லீக் முறையில், ஒவ்வொரு அணியும் மற்ற, 11 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடின.11 போட்டிகளில் 10 வெற்றி, ஒரு 'டிரா' என, 31 புள்ளிகள் பெற்று கே.ஆர்.வி., அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அடுத்து, 11 போட்டிகளில், ஒன்பது வெற்றி, ஒரு தோல்வி, ஒரு 'டிரா' என, 28 புள்ளிகளுடன் மதுக்கரை எப்.சி., அணி இரண்டாமிடத்தை பிடித்தன.'சி' டிவிஷனில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள், அடுத்த ஆண்டுக்காக 'பி' டிவிஷன் போட்டியில் விளையாடதகுதி பெற்றன. இந்தாண்டுக்கான 'பி' டிவிஷன் போட்டிகள் கடந்த 12ம் தேதி, கார்மல் கார்டன் பள்ளி மைதானத்தில் துவங்கியது. இதில், 12 அணிகள் லீக் முறையில் போட்டியிடுகின்றன.நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், அத்யாயனா எப்.சி., அணி, 3 - 2 என்ற கோல் கணக்கில், 'பிளட் ரெட்ஸ்' அணியை வீழ்த்தியது. அத்யாயனா அணிக்காக பரூக் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இரண்டாவது போட்டியில், வாகா எப்.சி., அணி, 4 - 1 என்ற கோல் கணக்கில், நியூ வீனஸ் அணியை வீழ்த்தியது. வாகா அணிக்காக, தீபக் மற்றும் சதீஷ் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். இன்றைய போட்டியில், 'டிரெண்டி இன்ஜி'., எப்.சி., அணியை எதிர்த்து, கோவைப்புதுார் எப்.சி., அணியும்; வேணு எப்.சி., அணியை எதிர்த்து, 'கோயமுத்துார் பார் அசோசியேஷன்' எப்.சி., அணியும் விளையாடுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE