கோவை சிறுமி மைசூரில் மீட்பு 'போக்சோ'வில் வாலிபர் கைது

Added : மே 14, 2022
Advertisement
கோவை;கோவையை சேர்ந்த சிறுமியை மைசூருக்கு கடத்திச்சென்ற வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி காணாமல் போய் விட்டதாக, மேற்கு அனைத்து மகளிர் போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சிறுமி காணாமல் போனதாக வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர் யசோதா தேவி தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், சிறுமியை கடத்திச்சென்ற நபர்,

கோவை;கோவையை சேர்ந்த சிறுமியை மைசூருக்கு கடத்திச்சென்ற வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி காணாமல் போய் விட்டதாக, மேற்கு அனைத்து மகளிர் போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சிறுமி காணாமல் போனதாக வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர் யசோதா தேவி தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், சிறுமியை கடத்திச்சென்ற நபர், மைசூரில் வைத்திருப்பது தெரியவந்தது. கோவை போலீஸ் தனிப்படையினர் மைசூர் சென்றனர். அங்கிருந்து சிறுமி மற்றும் கடத்திச்சென்ற வாலிபர் நசீர் உதீனை அழைத்து வந்தனர்.திருமணம் செய்து கொள்வதாக, ஆசைவார்த்தை கூறி சிறுமியை அவர் கடத்திச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, 'போக்சோ' சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நசீர் உதீன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X