மாநில தடகள போட்டி துவக்கம்; நேரு ஸ்டேடியத்தில் வீரர்கள் பரபர

Added : மே 14, 2022
Advertisement
கோவை:நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் மாநில அளவிலான சீனியர் தடகளப்போட்டியில், வீரர், விராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும், 94வது மாநில அளவிலான சீனியர் தடகளப்போட்டி மற்றும் இன்விடேஷனல் மூத்தோர் தடகளப்போட்டி நேற்று துவங்கியது.இப்போட்டியில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., 10000மீ., தடையோட்டம், போல்
 மாநில தடகள போட்டி துவக்கம்; நேரு ஸ்டேடியத்தில் வீரர்கள் பரபர

கோவை:நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் மாநில அளவிலான சீனியர் தடகளப்போட்டியில், வீரர், விராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும், 94வது மாநில அளவிலான சீனியர் தடகளப்போட்டி மற்றும் இன்விடேஷனல் மூத்தோர் தடகளப்போட்டி நேற்று துவங்கியது.இப்போட்டியில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., 10000மீ., தடையோட்டம், போல் வால்ட், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடக்கின்றன.நேற்று துவங்கிய இப்போட்டியில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1500க்கும் மேற்பட்ட, வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, முதல் நாளிலேயே பல புதிய சாதனைகளை படைத்தனர்.இப்போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள், ஜூன், 10ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள, தேசிய அளவிலான தடகளப்போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X