''தற்போதுள்ள நவீன சிகிச்சை முறைகளில், குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, டாக்டர் சகுந்தலா கூறினார்.பிம்ஸ் மருத்துவமனை மகப்பேறு மற்றும் செயற்கை கருத்தரித்தல் நிபுணர் சகுந்தலா கூறியதாவது:தற்போதைய சூழலில் குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. பொதுவாக ஆணுக்கு விந்தணு குறைபாடு, பெண்ணுக்கு கருமுட்டை உருவாவதில் பிரச்னை ஆகியவற்றால் தான், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றம், அதிக மன உளைச்சல், உணவு பழக்கம், ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், வேலைப்பளு, உணவில் அதிக ரசாயன கலப்பு உள்ளிட்டவை பிற காரணங்கள்.திருமணம் முடிந்த பின், தம்பதி ஓராண்டு இணைந்து வாழ்ந்த பின்பும், குழந்தை இல்லை என்றால், டாக்டரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பரிசோதனையில் ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு பிரச்னை இருப்பது தெரியலாம். இதை சரி செய்ய, பரிசோதனைகளின் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளலாம்.காலதாமதமாக திருமணம் செய்தவர்கள், 35 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள், குழந்தையின்மை பரிசோதனையை, ஆறு மாதங்களிலேயே செய்து கொள்வது நல்லது. பரிசோதனை முடித்தவுடன், செயற்கை குழாய் கருத்தரிப்பு தேவையில்லை. முதலில் கிருமி தொற்று, தாம்பத்திய உறவில் இடைவெளி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து கண்டறிந்து, அவற்றை தீர்க்கலாம். முதலில் மருந்துகள் மூலம் பிரச்னைகளை தீர்க்க, சிகிச்சை அளிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதற்கு பிறகும் பிரச்னை நீடித்தால், செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தையின்மை பிரச்னைக்கு தேவையான நவீன பரிசோதனைகள், சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 83001 08108 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE