கோவை:பட்டுக்கூடு விலை பாதியாக குறைந்ததால், பட்டுக்கூடு விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு, எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டுக்கூடு விலை அதிகரித்து, ஒரு கிலோ, 850 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலை படிப்படியாக குறைந்து, நேற்று ஒரு கிலோ, 432 ரூபாய் முதல், 470 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பட்டு விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். சைனா பட்டு நுால் விற்பனைக்கு வந்திருப்பதால், பட்டுக்கூடு விலை குறைந்துள்ளதாக, பட்டு நுால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பிறகு, எதிர்பார்க்காத அளவுக்கு, பட்டுக்கூடு விலை அதிகரித்தது. அதற்கு தறிகள் முழுமையாக இயங்கியதும் ஒரு காரணம். இப்போது விலை பாதியாக குறைந்துள்ளது. இந்த விலை குறைவுக்கு சைனா பட்டு இறக்குமதியாகி இருப்பதே காரணம். முழுமையான விபரம் தெரியவில்லை. மறுபடியும் பட்டுக்கூடு விலை உயர வாய்ப்பு உள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE