தக்காளி வரத்து குறைவு; ஒரு டிப்பர் 1,050 ரூபாய்| Dinamalar

தக்காளி வரத்து குறைவு; ஒரு டிப்பர் 1,050 ரூபாய்

Added : மே 14, 2022 | |
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி வரத்து குறைவால், ஒரு டிப்பர் தக்காளி, 1,050 ரூபாய்க்கு விற்பனையானது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைபொருட்களை, பூலுவபட்டி மற்றும் தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில், விற்பனை செய்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கடந்த ஒரு

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி வரத்து குறைவால், ஒரு டிப்பர் தக்காளி, 1,050 ரூபாய்க்கு விற்பனையானது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைபொருட்களை, பூலுவபட்டி மற்றும் தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில், விற்பனை செய்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கடந்த ஒரு மாதமாக, தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பூலுவப்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று, 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 1,050 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெண்டைக்காய், 50 ரூபாய்க்கும், கத்தரி 35 ரூபாய்க்கும், அவரை 80 ரூபாய்க்கும், பயிறு 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 20 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X