ஒரு முடி கூட இனி...

Added : மே 14, 2022
Advertisement
கோடைக்காலத்தில் சருமம் மட்டுமல்ல... கூந்தலும் வெப்ப கதிர்களால் பாதிப்படைகிறது. மாசு, வியர்வை, நீரிழப்பு காரணமாக வறண்டு போதல், முடி உதிர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம் என ஆலோசனை தருகிறார் அழகு கலை நிபுணர் செல்வி.n ப்ளோ டிரையர் என கூறப்படும், கூந்தலின் ஈரத்தை உலர்த்தும் கருவியை, கோடைக்காலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இக்கருவியின்
 ஒரு முடி கூட இனி...

கோடைக்காலத்தில் சருமம் மட்டுமல்ல... கூந்தலும் வெப்ப கதிர்களால் பாதிப்படைகிறது. மாசு, வியர்வை, நீரிழப்பு காரணமாக வறண்டு போதல், முடி உதிர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம் என ஆலோசனை தருகிறார் அழகு கலை நிபுணர் செல்வி.n ப்ளோ டிரையர் என கூறப்படும், கூந்தலின் ஈரத்தை உலர்த்தும் கருவியை, கோடைக்காலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இக்கருவியின் வெப்பம், சூரிய கதிர்களின் வெப்பம் இணைந்து, அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.n கூந்தலுக்கு சீரம் என்ற ஒரு வகை எண்ணெய், சந்தைகளில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தினால், ஈரப்பதம் கூந்தலில் இருந்து கொண்டே இருக்கும். இதனால், வறண்டு போவதை தவிர்க்கலாம்.n வெளியில் செல்லும் போது ஒரு துணி, கேப் அல்லது குடை பயன்படுத்தி கூந்தலை மூடிக்கொள்ள வேண்டும். நேரடியாக வெப்ப கதிர் படுவதை தவிர்க்கலாம்.n வெடிப்புகள் அதிகமாகும் முடியின், நுனி பகுதிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் எண்ணெய் தலையில் தடவிக்கொள்வது நல்லது.n உடலில் நீரிழப்பு ஏற்பட்டாலும், கூந்தல் பாதிக்கப்படும் என்பதால், சத்தான ஆகாரம் உண்ணுங்கள். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.n கற்றாழை மற்றும் பெரிய நெல்லிக்காய் சாறு கலந்து, தலையில் தேய்த்து பத்து நிமிடம் ஊறவைத்து, பின்பு தலைக்கு குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடி உதிர்வு கட்டுப்படும்.n ஷாம்புகளை அடிக்கடி மாற்றவும். ஒரே ஷாம்புவை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். நேரடியாக ஷாம்புவை தலையில் தேய்க்காமல், நீரில் கலக்கி அதனை தேய்த்து குளிக்க வேண்டும். அதிக சூடு கொண்ட தண்ணீரில் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.இதை பாலோ பண்ணிப்பாருங்க...ஒரு முடி கூட உங்களை விட்டு பிரியாது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X