வைகாசி பட்டத்துக்கு விதை வெங்காயம் ரெடி!| Dinamalar

வைகாசி பட்டத்துக்கு விதை வெங்காயம் ரெடி!

Added : மே 14, 2022 | |
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வைகாசி பட்டத்தில் நடவு செய்வதற்காக, விதை வெங்காயங்களை விவசாயிகள் வாங்கி தயாராக வைத்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த, பங்குனி மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பட்டறையில் அடைத்து வருகின்றனர். உரிய விலை கிடைக்காததால், சின்ன வெங்காயம்

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வைகாசி பட்டத்தில் நடவு செய்வதற்காக, விதை வெங்காயங்களை விவசாயிகள் வாங்கி தயாராக வைத்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த, பங்குனி மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பட்டறையில் அடைத்து வருகின்றனர். உரிய விலை கிடைக்காததால், சின்ன வெங்காயம் அறுவடை செய்த விவசாயிகள் நஷ்டத்தை அடைந்துள்ளனர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விளைநிலங்களில், விவசாயிகள் கோடை உழவு செய்துள்ளனர். அவ்வப்போது சாரல் மழை பெய்வதால், உழவு செய்த நிலங்கள் வளமடைந்து வருகின்றன. இந்நிலையில், விவசாயிகள் ஜூன் 15ம் தேதி முதல், வைகாசி பட்டம் சின்ன வெங்காயம் நடவு பணிகளை துவங்க உள்ளனர். இதற்காக, ஈரோடு மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து, விதை வெங்காயங்களை கிலோ, 30 ரூபாய்க்கு வாங்கி வைத்துள்ளனர். அடுத்த மாதம் முதல் நடவு பணிகளை துவங்க, தயாராகி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X