அனைத்து பிரியாணிக்கும் அனுமதி கேட்கிறார் த.மு.மு.க., நிர்வாகி

Added : மே 14, 2022 | |
Advertisement
கோவை:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, கோட்டைமேடு பகுதியில் உள்ள த.மு.மு.க., அலுவலகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையில் இஸ்லாமியர்களுக்கான அறிவிப்புகள்

கோவை:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, கோட்டைமேடு பகுதியில் உள்ள த.மு.மு.க., அலுவலகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையில் இஸ்லாமியர்களுக்கான அறிவிப்புகள் இல்லாததுவருத்தமளிக்கிறது.

எங்களது நீண்ட நாள் கோரிக்கையான, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களின் விடுதலை தொடர்பாக, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்காக அமைக்கப்பட்ட ஆதிநாராயணன் கமிஷன், தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது. ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, 7 தமிழர்கள் விடுதலைக்காக தமிழக அரசு வாதாடி பரோல் பெற்று கொடுத்தது போல, இஸ்லாமிய அரசியல் கைதிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும்.ஆம்பூர் பிரியாணி திருவிழாவில், மாட்டு இறைச்சி பிரியாணிக்கு அனுமதியில்லை என தெரிவித்தனர். எதிர்ப்பு எழுந்தவுடன் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். தமிழக அரசு தலையிட்டு, அனைத்து பிரியாணிக்கும் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X