சென்னை:'மதுக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல்,அலட்சியம் காட்டி னால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட மேலாளர்களை, 'டாஸ்மாக்' நிர்வாகம் எச்சரித்து உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லரை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட, கூடுதல் பணம் வசூலிக்கின்றனர். அதை மாவட்ட மேலாளர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அதன் உயரதிகாரிகள், மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர். அதில், மேலாளர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து, டாஸ்மாக் பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:'கூடுதல் விலைக்கு விற்பது உள்ளிட்ட முறைகேட்டை தடுக்க, மதுக் கடைகளில் தொடர் ஆய்வில் ஈடுபட வேண்டும்; அலட்சியம் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேலாளர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.ஆய்வு அறிக்கையை தலைமை அலுவலகத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE