மழைநீர் செல்லும் வழி பாதை ஆய்வு: குடியிருப்புகளில் நுழைவதால் அவதி

Added : மே 14, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:தேக்கம்பட்டி ஊராட்சியில், மழை நீர் தடுப்பது குறித்து, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் முருகேசன் ஆய்வு செய்தார்.காரமடை அடுத்த, தேக்கம்பட்டி ஊராட்சி, வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதியில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வரும் மழைநீர், விவசாய பூமி வழியாக குடியிருப்பு பகுதிகளிலும், வீதிகளிலும் செல்கிறது.இதனால் வீடுகளின் சுவற்றிலும்,
 மழைநீர் செல்லும் வழி பாதை ஆய்வு: குடியிருப்புகளில் நுழைவதால் அவதி

மேட்டுப்பாளையம்:தேக்கம்பட்டி ஊராட்சியில், மழை நீர் தடுப்பது குறித்து, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் முருகேசன் ஆய்வு செய்தார்.காரமடை அடுத்த, தேக்கம்பட்டி ஊராட்சி, வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதியில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வரும் மழைநீர், விவசாய பூமி வழியாக குடியிருப்பு பகுதிகளிலும், வீதிகளிலும் செல்கிறது.இதனால் வீடுகளின் சுவற்றிலும், ரோட்டிலும் மண் அரிப்பு ஏற்படுகிறது. எனவே விவசாய நிலத்தில் இருந்து வரும் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வேண்டுமென, மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (ஊராட்சி) முருகேசன், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால், ராஜலட்சுமி, தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் நித்தியா, துணைத் தலைவர் தங்கராஜ், செயலர் சதீஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.விவசாய நிலத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் வராமல் இருக்க, நிலத்தின் உரிமையாளர் அகழி அமைக்க வேண்டும்.வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாததால், ரோட்டில் தேங்கி உள்ளது. அனைத்து வீடுகளின் கழிவுநீர், குழாய் வழியாக கொண்டு சென்று, ஒரே குழியில் சேகரமாகும் வகையில், ஊராட்சியின் சார்பில், 'சோக்பிட்' அமைக்க வேண்டும்.மேலும், ஊராட்சியில் நடைபெறும் ஜல் ஜீவன் குடிநீர் திட்டப் பணிகளை, துரிதமாக செயல்படுத்த வேண்டும்.வெல்ஸ்புரத்தில் உள்ள பல்நோக்கு மைய கட்டுமான பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என, உதவி இயக்குனர் முருகேசன், அதிகாரிகளிடம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X