சென்னை:மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் கைதான இருவரையும், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 58;இவரது மனைவி அனுராதா, 55. அமெரிக்காவில் இருந்து திரும்பிய இவர்கள் இருவரையும் இம்மாதம் 7ம் தேதி அதிகாலை, டிரைவர் கிருஷ்ணாவும், அவர் கூட்டாளி ரவி ராயும் கொன்றனர்.இவர்களிடம், கொலைகளுக்கு பயன்படுத்திய கத்தி, உருட்டுக்கட்டை, 10 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி, வைர மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணைக்குப் பின், இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களை, ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு, நீதிபதி கவுதமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களிடம் விசாரணை நடத்த, 1,000க்கும் மேற்பட்ட கேள்விகளுடன், போலீசார் நீண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர். விசாரணை, 'வீடியோ' பதிவும் செய்யப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE