மகிழ்ச்சியும், சற்று அதிர்ச்சியும் தந்த வேதியியல்

Added : மே 14, 2022
Advertisement
விருதுநகர் : 'பிளஸ் 2 வேதியியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தபோதிலும் 15 மதிப்பெண்களுக்கான வினாக்கள் சற்று கடினமாக அமைந்ததால் மகிழ்ச்சியுடன் சற்று அதிர்ச்சி கலந்திருந்ததாக இருந்தது' என எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவதுகேள்விகள் எளிமைபாரதி, நோபிள் மெட்ரிக்குலேஷன், விருதுநகர்: கேள்விகள் அனைத்தும் மிக எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண்
 மகிழ்ச்சியும், சற்று அதிர்ச்சியும் தந்த வேதியியல்

விருதுநகர் : 'பிளஸ் 2 வேதியியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தபோதிலும் 15 மதிப்பெண்களுக்கான வினாக்கள் சற்று கடினமாக அமைந்ததால் மகிழ்ச்சியுடன் சற்று அதிர்ச்சி கலந்திருந்ததாக இருந்தது' என எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது


கேள்விகள் எளிமை


பாரதி, நோபிள் மெட்ரிக்குலேஷன், விருதுநகர்: கேள்விகள் அனைத்தும் மிக எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களை பார்த்த உடனே விடையளிக்க முடிந்தது. புத்தகத்தின் பின்பகுதி பயிற்சி கேள்விகளில் உள்ளது அப்படியே 5 மதிப்பெண் கேள்விகளாக வந்திருந்தது. வேதியியல் சமன்பாடுகள் தீர்வு காண்பது மிக கடினமாக இருக்குமோ என அச்சத்துடனே தான் சென்றேன். இன்ப அதிர்ச்சியாக கேள்விகளுக்கு சரியான தீர்வு கிடைத்தது.


சென்டம் வாங்கலாம்


-சிவரஞ்சனி, ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்: வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் புக் பேக் தான். மிக எளிமையாக மதிப்பெண்களை அள்ளலாம். முதல், இரண்டாம நிலை பருவ தேர்வுகளில் கேட்ட கேள்விகள் தான் வந்திருந்தது. வேதியியல் பாடம் கடினமாக இல்லாமல் நடுநிலையாகவே இருந்தது. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எளிதாக சென்டம் வாங்கலாம். என் வரைபடங்களை பார்த்தாலே ஆசிரியர்கள் முழு மதிப்பெண் வழங்குவர்.


எளிதான தேர்வு


லாவண்யா, பிளஸ் 2 மாணவி, ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, சிவகாசி: வேதியியல் தேர்வில் ஒரு, இரு, மூன்று, 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. இரு மதிப்பெண் கட்டாய வினாவில் ஒரு கேள்வி மட்டும் சற்று மாற்றி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் யோசித்து விடை அளித்தால் எளிதில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று விடலாம். மெதுவாக கற்கும் மாணவர்கள் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறலாம். அனைத்து கேள்விகளும் பாடத்திலிருந்து கேட்கப்பட்டதால் எளிதான தேர்வாக இருந்தது.


பயிற்சி எடுத்த கேள்விகள்


நவீன்குமார், மாணவர், வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி, திருச்சுழி: வேதியியல் தேர்வை பொருத்தவரை, எளிமையாக இருந்தது. அனைத்து கேள்விகளும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. 1 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள், நாங்கள் அடிக்கடி பயிற்சி எடுத்த கேள்விகளாகவே இருந்தது. கேள்வி களை பார்த்தவுடன், விடையளிக்கும் வகையில் ஈசியாக இருந்தது. மொத்தத்தில் வேதியலில் மதிப்பெண்களை அள்ளலாம்.---


அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு


காமராஜ், வேதியியல் ஆசிரியர்,தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி அருப்புக்கோட்டை: வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் மிக எளிமை. 2, 3 மதிப்பெண் வினாக்கள் யோசித்து எழுதும் படியாக இருந்தது. பாடப் புத்தகத்திலிருந்து பெரும்பாலும் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. பயிற்சி தேர்வுகளில் மாணவர்கள் தொடர்ந்து, பயிற்சி பெற்று இருப்பதால், எளிமையாக தேர்வு எழுத எழுதியுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.----


அனைவரும் வெற்றி பெறலாம்


லிங்கவேல், வேதியியல் ஆசிரியர், எஸ்.என்.எம்., கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி: ஒரு மதிப்பெண் வினாவில் 70 சதவீதம் பாடத்தின் பின்னால் இருந்தும் 30 சதவீதம் பாடத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் எளிதில் விடை அளித்து விடலாம். மாணவர்கள் எதிர்பார்த்து சென்றதை போலவே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. அனைத்து மாணவர்களும் எழுதி தேர்ச்சி பெறும் விதத்தில் கேள்விகள் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X