பெருமாள் கோவிலில் வேண்டுதல் நிறைவேற்றும் துர்கா ஸ்டாலின்

Added : மே 14, 2022 | கருத்துகள் (2)
Advertisement
வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் மனைவி துர்கா, திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் ராஜகோபுரவிமானத்திற்கு, இன்று தங்க தகடுகள் வழங்குகிறார்.கடந்த 2011, 2016 ஆகிய இரண்டு சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., தோல்வி அடைந்தது.தங்க தகடுகள்ஒரு முறை, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தி.மு.க., இழந்தது. இந்த தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, ஸ்டாலின் முதல்வராக

வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் மனைவி துர்கா, திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் ராஜகோபுரவிமானத்திற்கு, இன்று தங்க தகடுகள் வழங்குகிறார்.
கடந்த 2011, 2016 ஆகிய இரண்டு சட்டசபை தேர்தல்களில், தி.மு.க., தோல்வி அடைந்தது.தங்க தகடுகள்ஒரு முறை, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தி.மு.க., இழந்தது. இந்த தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, ஸ்டாலின் முதல்வராக வேண்டி, திருத்தணி, பழநி, திருக்கோஷ்டியூர் என, பல கோவில்களுக்கு சென்று துர்கா வழிபட்டார்.
பல்வேறு காணிக்கைகளையும் வழங்கி, தன் வேண்டுதலை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் உள்ள சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டாங்க திவ்ய விமானத்திற்கு தங்க தகடுகள் ஒட்டும் நிகழ்ச்சி, இன்று நடைபெறுகிறது.


திருப்பணி

இன்று காலை 11:00 மணிக்கு மேல் 12:20 மணிக்குள், ஸ்ரீ அஷ்டாங்க திவ்ய விமானத்திற்கு தங்க தகடுகள் ஒட்டும் திருப்பணி நடக்கிறது.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி சாஹிபா கவுரிவல்ல மதுராந்தகி நாச்சியார் முன்னிலையில் துர்கா, தங்க தகடுகள் பதித்து துவக்கி வைக்கிறார். தங்க விமானம் முழுமை அடைய, தற்போது இருக்கும் தங்கத்தை விட, கூடுதல் தங்கம் தேவைப்படுகிறது.அதில் தன்னால் இயன்ற தங்கத்தை தருவதாக, துர்கா கூறியுள்ளதுடன், தங்கத் தகடு ஒட்டி, தன் வேண்டுதலையும்நிறைவேற்ற உள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
netrikannan - Kajang,மலேஷியா
14-மே-202207:45:08 IST Report Abuse
netrikannan ்்்்..
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
14-மே-202202:37:53 IST Report Abuse
BASKAR TETCHANA இருக்கிற சொத்துக்கள் போதவில்லை என்றா இல்லை உங்கள் தம்பிக்கு மந்திரி சபையில் பதவி கேட்டா. ஆகா விரைவில் கோட்டையில் குடும்ப அரசியல் கோடி பறக்க வேண்டும் என்று வேண்டி கொண்டீர்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X