சிவகாசி : சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் இந்து கம்மவார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ருக்மணி சத்யபாமா, கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.மூன்று நாட்கள் நடந்த கும்பாபிஷேக விழாவில் முதல் நாளில் ப்ரார்த்தனா ஸுக்தம், ஸங்கல்பம், புண்யாஹவாஜனம், அங்குரார்ப்பணம், வாஸ்து அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை, ஹோமம் பூர்ணாஹுதி சடங்குகள் நடந்தது.
கும்பாபிஷேக விழாவான நேற்று ஹோமம், மகா பூர்ணாஹூதி கும்பம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து ருக்மணி சத்யபாமா, கிருஷ்ண ரூபியாய், தாயார் மகாலட்சுமி சன்னதி, கருடர், சக்கரத்தாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், அனுமர் ஆழ்வார் சன்னதிகளுக்கு விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, பூஜை, தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி திருவீதி உலா வந்து, பாகவதோத்தமர்களின் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது.ஏற்பாடுகளை இந்து கம்மவார் சங்கம் தலைவர் லிங்குசாமி, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சேது ராமானுஜம், இந்து கம்மவார் இளைஞர் நற்பணி மன்றம், விழா கமிட்டி, பொதுமக்கள் செய்திருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement