கோவை:''கொரோனா மூன்று அலையை தாண்டி, நான்காவது அலையில் மாட்டி கொள்ளக்கூடாது; கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை ஆய்வு நடத்தினார்.
இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:'ஜெய்கா' திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில், 12 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு, குடல்நோய் பிரிவு, நரம்பியல், எலும்பியல் துறைகள் பல்வேறு வசதிகளுடன் தயாராகி வருகின்றன. 32 அதிநவீன ஐ.சி.யு., படுக்கைகள் தயாரிப்பு பணி முடியும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 100க்கும் கீழே பதிவாகி வருகிறது.
மூன்று அலையை நாம் தாண்டி விட்டோம். நான்காவது அலையில் மாட்டி கொள்ளக்கூடாது. மூன்றாவது அலையில் சுலபமாக வெளிவந்ததற்கு காரணம் தடுப்பூசி. தமிழகத்தில், இரண்டாவது தவணை எடுத்து கொள்ள வேண்டியவர்கள், 1.29 கோடி பேர் உள்ளனர். முதல் தவணை எடுக்காதவர்களாக, 45 லட்சம் பேர் உள்ளனர். பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள், 10 லட்சம் பேர் உள்ளனர்.கோவை அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி கொடுத்ததற்கு எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. குறைந்தபட்ச கூலி தவறுதலாக கொடுக்கப்பட்டால் சரி செய்யப்படும். இது கலெக்டர் முடிவு செய்ய கூடியது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE