கூடலுார் : கூடலுார் மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி துவங்கிய சில நாட்களிலேயே நிறுத்தி வைத்துள்ளதால் பணியில் தொய்வு ஏற்படடுள்ளது.
கூடலுார் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு வாகனப் போக்குவரத்து அதிகம். தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தால் புறவழிச்சாலை பணி முடிந்தும் முறையாக பயன்பாட்டிற்கு வராமலே போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடலுார் தெற்குப் பகுதியில் மந்தை வாய்க்காலில் இருந்து வடக்கு பகுதியில் சினிமா தியேட்டர் வரை 4 கி.மீ., தூரம் நகர் பகுதியில் உள்ள ரோடு மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் கூடலுார் மாநில நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மின்கம்பங்களை மாற்றியமைக்க அளவீடு மேற்கொள்ளப்பட்டு இதற்காக டெண்டரும் விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பணிகளில் கடந்த சில நாட்களாக தொய்வு ஏற்பட்டுள்ளது.
ரோட்டோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மந்தை வாய்க்காலில் இருந்து அகலப்படுத்துவதற்கான பணிகள் ஏப்ரலில் துவங்கியது. துவங்கிய சில நாட்களிலேயே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, 'ஆக்கிரமிப்பாளர் அகற்ற கால அவகாசம் கேட்டுள்ளனர். மேலும் ரோட்டின் குறுக்கே ஓரிரு இடங்களில் பாலம் அமைக்க வேண்டியுள்ளது. இப்பணி முடிந்தவுடன் அகலப்படுத்தும் பணி துவங்கும்' , என்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement