சென்னை:நடிகையை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் சிக்கிய, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில்,பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன், 43. இவர் மீது, நடிகை சாந்தினி, 36, என்பவர், 2021 மே 28ல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதில், 'மணிகண்டன் என்னுடன் ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தினார்.
மூன்று முறை கர்ப்பமானேன்; கட்டாய கருக்கலைப்பு செய்யச் சொன்னார். அடித்து சித்ரவதை செய்தார்.'என் அந்தரங்க படங்களை, இணையதளத்தில் வெளியிடுவதாக கொலை மிரட்டல் விடுக்கிறார்' எனக் கூறியுள்ளார்.இதுகுறித்து போலீசார் விசாரித்து, மணிகண்டன் மீது, கற்பழிப்பு உட்பட, எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து சாந்தினி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், 'மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை பாதிக்கும் வகையில், பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதை நீக்க வேண்டும்.
மணிகண்டனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மணிகண்டன், ஆறு வாரத்திற்குள் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE