ரூ.2 கோடி மதிப்பு தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

Added : மே 14, 2022 | |
Advertisement
திருச்சி:துபாய், சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து, திருச்சிக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து, கடந்த 11 இரவு, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானங்களில், மத்திய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மூன்று பயணியர்

திருச்சி:துபாய், சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து, திருச்சிக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து, கடந்த 11 இரவு, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானங்களில், மத்திய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மூன்று பயணியர் மறைத்து கடத்தி வந்த, 1.28 கோடி மதிப்புள்ள தங்கத்தை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.

அது போல, 12ல், சிங்கப்பூரில் இருந்து வந்த 'இண்டிகோ' விமானத்தில் சோதனை நடத்தியதில், கழிப்பறையில் மறைத்து வைத்திருந்த, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தையும் கண்டுபிடித்தனர்.அதையும் பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவு போலீசார், கடத்தலில் தொடர்புடையவர்கள் பற்றியும் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X