கோவை:திருமண பத்திரிகை கொடுப்பதற்காக கோவை வந்த மணமகன் துாக்கிட்ட நிலையில் இறந்தது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டை வி.பெரியகுப்பம், வண்டிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சவுந்திரராஜன்,32. இவர் 'ஸ்கை லிங்க் நெட்வொர்க்' நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்தார். இவருக்கு வரும் 25ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமண பத்திரிகையை தான் வேலை பார்க்கும் நிறுவன உரிமையாளர் மற்றும் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக, சவுந்திரராஜன் கோவை வந்தார்.பீளமேடு டீச்சர்ஸ் காலனி சக்திவிநாயகர் நகரில் தங்கியிருந்த சவுந்திரராஜன், உறவினர்கள் போன் செய்தபோது எடுக்கவில்லை. சந்தேகத்தில் நண்பர்கள் சென்று பார்த்தபோது துாக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார்.திருமணம் நடக்கவுள்ள நிலையில் மணமகன் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE