பல்கலை விழாவில் நிருபர்களுக்கு 'லஞ்சம்'

Added : மே 14, 2022
Advertisement
கோவை:கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பைல்களில், 500 ரூபாய் இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலை சார்பில் வழங்கப்படும் தகவல்கள் அடங்கிய பைலில், ஒரு கவரில், 500 ரூபாய் நோட்டு இருந்தது. இதைப்பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல்கலை துணைவேந்தர்
 பல்கலை விழாவில் நிருபர்களுக்கு 'லஞ்சம்'

கோவை:கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பைல்களில், 500 ரூபாய் இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலை சார்பில் வழங்கப்படும் தகவல்கள் அடங்கிய பைலில், ஒரு கவரில், 500 ரூபாய் நோட்டு இருந்தது. இதைப்பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல்கலை துணைவேந்தர் காளிராஜை சந்தித்த பத்திரிகையாளர்கள், பணம் கொடுத்தது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தனர். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில்,''பத்திரிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்த விஷயம் எனக்கு தெரியாது. பணம் கொடுத்தது யார் என, விசாரிக்கப்படும். மேலும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X