சென்னை:சென்னையில், மேடவாக்கம் மேம்பாலத்தின் இரண்டாவது பகுதியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
போக்குவரத்து நெரிசல்
மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலை, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை, மவுன்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்தது.இதனால், தாம்பரம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழிற்நுட்ப சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்கநல்லுார், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதி களுக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
'இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்படும்' என, அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பணிகள் தாமதம்கட்டுமானப் பணிகள் 2020ம் ஆண்டு துவங்கின. பல்வேறு காரணங்களால், பணிகள் தாமதமாகி வந்தன. வேளச்சேரி - தாம்பரம் வழித்தடத்தில், மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து, 1.06 கி.மீ.,யில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டும் போக்கு வரத்துக்கு திறக்கப்பட்டிருந்தது.
தாம்பரம் - வேளச்சேரி வழித்தடத்தில், மவுன்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலை சந்திப்புகளை இணைத்து, 2.03 கி.மீ.,க்கு மேம்பாலம் கட்டும் பணிகள் சமீபத்தில் துரிதப்படுத்தப்பட்டன.இந்த மேம்பாலப் பகுதிக்கு மட்டும் திட்ட மதிப்பீட்டில், 95.21 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE