அகழாய்வில் கிடைத்த

Added : மே 14, 2022
Advertisement
சிவகாசி:விருதுநகர் மாவட்டம்வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் முன்னோர் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன புகை பிடிப்பான் கருவி, மணிகள் கிடைத்துள்ளன.வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரையிலும் தோண்டப்பட்ட 5 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், பானை, பொம்மைகள், தக்களி,
 அகழாய்வில் கிடைத்த

சிவகாசி:விருதுநகர் மாவட்டம்வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் முன்னோர் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன புகை பிடிப்பான் கருவி, மணிகள் கிடைத்துள்ளன.
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரையிலும் தோண்டப்பட்ட 5 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், பானை, பொம்மைகள், தக்களி, அகல் விளக்கு மற்றும் சூதுபவளம், விலங்குகளின் எலும்புகள் கிடைத்தது.
புதிதாக தோண்டப்பட்ட 6 வது குழியில் சுடுமண்ணால் ஆன புகை பிடிப்பான் கருவி கிடைத்துள்ளது. இது அலங்காரத்துடன் உள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன பானைகளுக்கு அடையாளமாக ஏராளமான பானை ஓடுகள் கிடைத்துள்ளன.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், '' ஆழம் அதிகரிக்க அதிகரிக்க தினமும் பொருட்கள் கிடைத்தபடி உள்ளது. 7 வது குழி தோண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்கள் கிடைக்கலாம்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X