சிவகங்கை:புதிய கல்விக்கொள்கையில் நல்ல திட்டங்கள் இருந்தால் அவற்றை ஏற்கலாம் என சிவகங்கையில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்துார் மணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்பட்ட, மக்கள் ஏற்காத ஒருவரை பிரதமராக்கியுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் ராஜபக்சே குடும்பத்தினர். அவர்கள் மொத்தமாக பதவி விலக வேண்டும். அதுவரை இலங்கையில் போராட்டம் ஓயாது.
தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கிவிட்டனர். இதுவே திராவிட மாடல்.பா.ஜ., வுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க., தமிழகத்திற்கான உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டு பெறலாம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் பழைய பென்ஷன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இது பற்றி நல்ல முடிவு எடுப்பார்.புதிய கல்வி கொள்கையில் நல்ல திட்டங்கள் இருந்தால் அதை ஏற்கலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திசை திருப்பவே தமிழக அரசை, மத்திய அரசு குறைகூறுகிறது, என்றார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement