விருதுநகர்:விருதுநகரில் அரசு பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததை தட்டிக்கேட்ட டிரைவர், கண்டக்டரை கல்லுாரி மாணவர்கள் தாக்கினர். இதனால் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்
விருதுநகர் சத்திரரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று காலை பேய்க்குளத்தில் இருந்து விருதுநகருக்கு பயணிகளை ஏற்றி வந்து கொண்டு இருந்தார். கண்டக்டராக முத்துராஜ் பணியாற்றினார்.அதே ஊரை சார்ந்த சிவகாசி, விருதுநகர் கல்லுாரி மாணவர்கள் 8 பேர் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இதை பல முறை கண்டக்டர், டிரைவர் கண்டித்தும் கேட்கவில்லை. விருதுநகர் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் ஜெயராமன் மாணவர்களை கண்டித்தார். அவர், அவருக்கு ஆதரவாக பேசிய டிரைவர் பெரியகருப்பன், முத்துராஜை மாணவர்கள் தாக்கினர்.இதையடுத்து டிரைவர்கள் பஸ்களை எடுக்க மறுத்து போராட்டத்தில் இறங்கினர். எஸ்.ஐ., கார்த்திக் செல்வம் தலைமையில் போலீசார் டிரைவர்களை சமாதானம் செய்தனர். காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE