சென்னை:விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.71 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, 'இண்டிகோ' விமானம், நேற்று காலை சென்னை வந்தது.
அந்த விமானத்தில் இருந்து வெளியே வந்த, சென்னை மண்ணடியை சேர்ந்த தமீம் அன்சாரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஷாஜிதா யாஸ்மின் ஆகிய இருவரின் உடைமைகளையும், சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களது உடைமையில், பழுப்பு நிற பிளாஸ்டிக் பையில், 72.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்து மதிப்பிட்டதில், 72.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.60 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. இருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இதேபோல, சர்வதேச விமான முனையத்தின், கழிப்பறை குப்பைக் கூடையில் பாலிதீன் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள், பையை பரிசோதித்தபோது, 97.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2.11 கிலோ தங்கம் இருந்தது.இது குறித்து, சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE